திருட்டுப்போன மிதிவண்டியைக் கண்டுபிடிக்கும் மிதிக்கட்டை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Connected Cycle என்ற நிறுவனம் ஒரு விசேட மிதிக்கட்டை (pedal) ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த மிதிகட்டை பொருத்தப் ப...

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Connected Cycle என்ற நிறுவனம் ஒரு விசேட மிதிக்கட்டை (pedal) ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த மிதிகட்டை பொருத்தப் பட்ட மிதி வண்டி எங்கு நின்றது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அசைகின்றதா? போன்ற விடயங்களை உங்களது தொலைபேசி அல்லது டப்லெட் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

இந்த மிதிக்கட்டை உங்களது வேகம், நீங்கள் செல்லும் பாதை, சூழல் நிலை, ஒவ்வொரு பயணத்தின்போதும் நீங்கள் இழந்த கலோரி இன் அளவு போன்ற பல முக்கியமான தரவுகளை உடனுக்குடன் தொகுத்து, cloud (மேக சேமிப்பு) இல் சேமித்து விடும். இந்தத் தரவுகளை எப்போது வேண்டுமானாலும், ஊங்களது கைபேசியில் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த மிதிக்கட்டையினை இரண்டு நிமிடத்துக்குள் எந்த மிதி வண்டியிலும் பொருத்திக்கொள்ள முடியும். ஆனால் அதை நீக்க ஒரு விசேடமான கடவுச்சொல் முறை பயன்படுத்தப் படுகிறது.

இந்த மிதி கட்டை தானாகவே மின்சாரத்தை உருவாக்கிக் கொள்ளும் திறன் உடையவை என்பதுடன், சுயமான ஒரு இணைய முறையைப் பயன்படுத்துவதாக இதை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள்.

Related

தொழிநுட்பம் 8174608278382048060

Post a Comment

emo-but-icon

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item