உங்களது பாஸ் இடம் பேசக் கூடாத 27 விடயங்கள் ..

நேர்மை என்பது எல்லோரிடமும் இருக்கவேண்டியதும் முக்கியமானதுமான விடயமே, ஆனால் அதுவே உங்களது தொழில் பிரச்சினையாக மாறிவிடக் கூடாது.  எந்த...

நேர்மை என்பது எல்லோரிடமும் இருக்கவேண்டியதும் முக்கியமானதுமான விடயமே, ஆனால் அதுவே உங்களது தொழில் பிரச்சினையாக மாறிவிடக் கூடாது. 

எந்த விடயத்தை முதலாளி (பாஸ்) அல்லது முகாமையாளருடன் (மேனேஜர்) பேசவேண்டும்; எந்த விடயத்தைப் பேசக் கூடாது என்பது பற்றிய சரியான அறிவு இருந்தாலேயன்றி இந்த போட்டியுடன் கூடிய உலகத்தில் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினமான விடயம். அதிலும் அனைத்து அரசியலும் நிறைந்த உங்களது வேலை செய்யும் இடத்தில் இன்னும் கடினமே..


எதைப் பேசவேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்து, தயாராகியே செல்ல வேண்டும்.. ஒரு வார்த்தையில் நாம் சறுக்கினாலும் அது எமது பல வருட தொழிலுக்கே ஆபத்தானதாக அமையலாம்..

இதைப் பேசினால் பொருத்தமானதாக இருக்காது அல்லது தவறானது போல் தோணலாம் என்று ஒரு துளியேனும் நினைத்தால், அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஒரு முறை வார்த்தை வெளியேறினால் அதை மீண்டும் சரி செய்ய முடியாது அல்லது செய்வது மிகவும் கடினமானது என்றே சொல்ல வேண்டும். 

இதனடிப்படையில், சில சொற்கள் அல்லது சொற் தொடர்கள் அல்லது வசனங்கள் நீங்கள் ஒருபோதும் உங்களது முதலாளி அல்லது முகாமையாளரிடம் சொல்லக் கூடாது அல்லது சொல்வதைத் தவிர்க்க வேண்டும்,,, அவை பின்வருமாறு,,,,

என்னால் முடியாது...
'என்னால் முடியும்' என்ற பண்பு எப்பொழுதும் நல்லது, நல்ல குண இயல்பைப் பிரதிபலிக்கும். என்னால் முடியாது என்பது, உங்களது இயலாமை, முயற்சி செய்யும் திறன் இன்மை, சோம்பல் நிலை மற்றும் உங்களிடம் உங்களைப் பற்றியே தன்னம்பிக்கை இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டும். இது ஒருபோதும் உங்களது முகாமையாளரைக் கவராது.

அது எனது பொறுப்பு அல்ல.. அல்லது அது எனது வேலைக்கு உட்பட்டது அல்ல..
பொதுவாக உங்களது வேலை மற்றும் பொறுப்புகள் என்ன என்பது உங்களது 'வேலை விபரத்தில்' தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். அதற்கு மேல் எதையும் செய்ய முடியாது அல்லது செய்யக் கூடாது என்ற நிலைப் பாடு, நீங்கள் உங்களது பாஸ் இன் வார்த்தைக்கு மதிப்ப்புக் கொடுக்கவில்லை, நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளத் தயாராக இல்லை அல்லது நீங்கள் பல்திறன் கொண்டவர் இல்லை என்பதைக் குறிக்கும்.. 

எனக்குத் தெரியாது 
எல்லாக் கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருக்க வாய்ப்பு இல்லை அல்லது எல்லா விடயமும் நீங்கள் தெரிந்து இருக்கவும் முடியாது. அதற்காக தெரியாது என்ற வசனம் பயன்படுத்துவது ஒரு நேரான அணுகுமுறையாக இருக்க முடியாது. எனக்குத் தெரியாது என்பதை வேறு பொருத்தமான முறைகளிலும் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அது எப்படி என்பதையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்..

இல்லை.. அல்லது முடியாது..
முடியாது என்று பாஸ் இன் கூற்றுக்கு பதில் சொல்வது ஒன்றும் இலகுவான காரியம் இல்லை. இதை வேறு விதமாக சொல்ல முடியும். "உதாரணமாக உங்கள் பாஸ் உங்களிடம் இன்று 'குமார் செயல்திட்டத்தில்' வேலை செய்ய நேரம் இருக்குமா? எண்டு கேட்டால்," முடியாது என்பதை விட " முகுந்தன் கோ செயல் திட்டத்தில் வேலை செய்வதோடு அந்தச் செயல் திட்டத்திலும் வேலை செய்வது எனக்கு மிகவும் சவாலாகவே இருக்கும். ஆனால் குமார் ப்ராஜெக்ட் ஐ நாளை செய்தால் நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று பதில் கொடுப்பது பொருத்தமானதாக இருக்கும்.

நான் முயற்சி செய்கிறேன்..
பலர் நான் முயற்சி செய்கிறேன் என்ற சொல் முடியாது என்று சொல்வதிலும் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உங்களால் அதைச் செய்ய முடியுமா என்ற கேள்விக் குறியை உங்களது பாஸ் முன் கொண்டு செல்லும்.. நாளடைவில் உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கைக்குக் களங்கம் ஏற்படும். அதே நேரம், "எனது சம்பளத்தை முன் கூட்டிப் பெற முடியுமா" என்று நீங்கள் கேட்டு அதற்கு உங்களது பாஸ் "நான் முயற்சி செய்கிறேன் என்றால், உங்களது நிலைப்பாடு என்ன?

நான் அப்படித்தான் நினைத்தேன்.. அப்படித்தான் கேள்விப் பட்டேன் 
உங்களுக்கே தெளிவு இல்லாத ஒரு விடயத்தை பேச முன் கட்டாயம் நன்கு சிந்திக்க வேண்டும். அதிலும் சரியான தெளிவு இல்லாத பட்சத்தில், சந்தேகத்துடன் கூடிய வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது, உங்களது தொழில்முறைக்கு பொருத்தமானது அல்ல..

இதனால் எனக்கு என்ன நன்மை..இலாபம் 
சிலவேளை உங்களது பாஸ் வேறு துறைகளுக்கு உதவு முகமாக உங்களுக்கு உங்களது நிறுவனத்திலேயே, வேறு துறை சார்ந்த ஒரு பணியைக் கொடுக்கலாம். உங்களது அந்த பதில் நீங்கள்  ஒரு குழுவாக வேலை செய்ய விருப்பமில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. ஆனால்..
உங்களது தவறுக்கு தெளிவு இல்லாத அல்லது உறுதியாகக் கூற முடியாத வேறு காரணங்களும் இருக்கும் பட்சத்தில், ஆனால் என்று சொல்லித் தொடர்வதை விட, 'என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அடுத்தமுறை நான் இன்னும் ஜாக்கிரதையாக இருப்பேன்' என்பதே நீங்கள் குழப்பத்துடன் இருக்கும்போது பொருத்தமான பதில்.

அனால்.. நான் என்னால் முயன்ற அளவு முயற்சித்தேன்
நீங்கள் செய்த ஒரு தவறுக்கு இந்த முறையில் சாக்குப் போக்கு சொல்ல முடியாது.. இங்கேயும் அடுத்தமுறை இதைத் தவிர்ப்பேன் என்று சொல்வதே சிறந்த பதில். நீங்கள் செய்த தவறு உங்களது முழு முயற்சியால் வந்தது ஆக முடியாது.. அப்படியாயின் உங்களது முழு முயற்சியின் அளவு வெட்ட வெளி..

நான் விலகுகிறேன்.. வேலையை விட்டு நீங்குகிறேன்..
நான் விலகுகிறேன் என்று நிறுவனத்தை அச்சுறுத்த வேண்டாம். இது ஒரு நேர்த்தியான தொழில் முறை அல்ல. நிறுவனம் உங்களைத் தொடர்ச்சியாக வைத்திருந்தாலும், நீங்கள் "எப்பொழுதும் விலகலாம்" என்ன எண்ணத்திலே பார்க்கும், நடத்தும்..

நான் அப்படி நினைத்தேன்..
இது எந்த பாஸ் உம் பொதுவாக விரும்பாத வார்த்தை. இதிலிருந்து, நீங்கள் தவறு செய்ததாகவும், அதிலிருந்து வெளிவர பிள்ளைச் சாட்டு சொல்வாதாகவுமே அமையும். 

அதை நான் முன்னே முயற்சித்தேன்
உண்மையிலேயே அந்த விடயத்தை முதலில் முயற்சி செத்துதான் இருந்தாலும், எடுத்த எடுப்பிலேயே நான் ஏற்கெனவே முயன்று பார்த்தேன் என்று சொல்வது உங்களது சோம்பல் தனத்தைக் குறிக்கும். அதே நேரம், பாஸ் இன் அந்த முறை சிறந்தது என்றும், அதை முன்னமே முயற்சித்ததில் எப்படியான முடிவு கிடைத்தது என்றும், மீண்டும் மிக கடுமையாக முயற்சி செய்கிறேன் என்றும் கூறுவது மிகவும் சிறந்தது.

நான் முன்பு வேலை செய்த இடத்தில் நாங்கள் இப்படிச் செய்தோம்
எந்த முகாமையாளரும் / பாஸ் உம் இப்படிப் பட்ட நடத்தையை ஆதரிப்பதில்லை. உங்களுக்கு ஒரு விடயத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது தொடர்பான மிகச் சிறந்த அறிவு இருப்பின், அதை நுணுக்கமாக சொல்ல வேண்டிய முறையில் அணுகி, விளக்க வேண்டும். நீங்கள் தெரிந்த விடயத்தை பலவந்தமாக திணிக்க எத்தனிப்பதை விட, ஒரு கேள்வியாகக் கேட்டு, சவாலான பதிலைப் பெறுவதே சிறந்தது. 

அது உண்மையிலேயே எனது தவறு அல்ல.. ஜோசேப் இன் தவறு..
அவன் தவறு இவன் தவறு என்பதெல்லாம் பாடசாலை செல்லும் குழந்தைகளின் பேச்சு. ஒரு விடயத்தில் நீங்கள்தான் அடிப்படைப் பொறுப்பு தாரியாக இருப்பின், என்ன நடந்தது என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். யாரையும் சுட்டிக் காட்டுவதை தவிர்ப்பது சிறந்தது.

முன்னிருந்த பாஸ்/ முகாமையாளர் இதை வேறு விதமாக செய்தார்
எந்த பாஸ் உம் தாம் தமக்கு முன் இருந்தவரை விடவும் சிறந்த முறையில் வேலை செய்கிறோம் என்ற நிலைப் பாட்டையே கொண்டுள்ளனர். உங்களது பாஸ் உண்மையிலேயே ஒரு விடயத்தைப் பிழையாக செய்யாத பட்சத்தில், போஸ் இற்கு சவால் விடுவதிலும் இருந்து தவிர்ந்து கொள்வது சிறந்தது.

நான் சலித்து விட்டேன்
நீங்கள் சலித்துப் போய் இருப்பதைக் கூற உங்களது பாஸ் ஐத் தேர்ந்து எடுத்து விடாதீர்கள். நீங்கள் நல்ல திறமை உள்ளவர் என்ற அடிப்படையிலேயே நிறுவனம் உங்களுக்கு ஊதியம் வழங்குகிறது. உங்களது தொழிலை சவாலானதாகவும் சுவாரஷ்யமானதாகவும் ஆக்கிக்கொள்வது உங்களது பொறுப்பு.

என்னால் அவருடன் வேலை செய்ய முடியாது
"மற்றவர்களுடன் ஒத்துப் போகாத தன்மை" பாடசாலைகளிலும்சரி காரியாலயத்திலும்சரி, என்கானாலும் பொருத்தமற்றதே. உங்களது தனிப்பட்ட பிரிவினைகள் மற்றும் மோதல்களையும் தாண்டி, குழுவாக இயங்கி, நிறுவனத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்பவர்களாகவே நீங்கள் கருதப் படுவீர்கள்.

அவன் மிகவும் மோசமானவன்
உங்கள் பாஸ் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது அவர் கொடுத்த வேலையைச் செய்துல்லேர்களா என்பதே. அடுத்தவர்களைப் பற்றிக் குறை கூறுவது, உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும்.

நீங்கள் ஒன்றும் சொல்லாத பட்சத்தில் நான் "இப்படி" செய்யவா?
இது ஒருவகையான பயமுறுத்தும் பாணி.. இதை விட பொறுத்திருந்து முடிவை எதிர்கொள்வதே மேல்.

உங்களுடைய பாஸ் உடன் அல்லது HR உடன் பேசவா?
நீங்கள் தொழிலை விடப் போபவராக இருக்காத பட்சத்தில் அல்லது உங்கள் பாஸ் இடம் முழுசாக முயன்று முடியாமல் போன சந்தர்ப்பத்திலேயே அன்றி,  உங்களது பாஸ் இன் அதிகாரத்தை சவால் விடுவது பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும். HR இடம் பேச முனைவதாக இருந்தாலும், முதலிலேயே உங்களது பாஸ் ஐ மிரட்ட வேண்டிய அவசியம் இல்லையே..

என்னிடம் தீர்வு இல்லை
பொதுவாக தலைவர்கள் தீர்வுகளைப் பற்றிப் பேசுவார்கள்; பின் தொடரும் கூட்டமே பிரச்சினைகளைப் பற்றிப் பேசும். எதையேனும் ஒரு தீர்வை அடையாமல் பிரச்சினையை முன்வைக்காதீர்கள்.

ஏன் ஜான் உக்கு இவ்வலவு கொடுக்குரீர்கள்.. எனக்கு இல்லையா?
அடுத்தவர்களின் சம்பளம் அல்லது பதவி உயர்வைப் பார்ப்பதை விட்டு விட்டு, உங்களது தொழில் விருத்தி பற்றிச் சிந்திப்பதே சிறந்தது. உண்மையிலேயே உங்களுக்கு ஒரு அநியாயம் நடந்து இருந்தால், அதை இன்னும் நேர்த்தியான தொழில் முறையில் பேசித் தீர்க்க விளைய வேண்டும்.

நான் கொஞ்சம் பிஸி.. பிறகு செய்யவா..
எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என்று பணிப்பவர் உங்களது பாஸ் ஆவார். எந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பாஸ் இடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் இன்று ஒரு மணி நேரம் முன்னாடியே போகவா? பெரிதாக வேலை இல்லை..
நீங்கள் ஒரு மணி நேரம் முன்னாடியே செல்வது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. அதற்கு எதுக்கு இப்படி ஒரு காரணம்? பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என்று சொல்வதை விட, சில ஒழுங்கு படுத்தும் விடயங்களில் ஈடுபடலாமே. வேறு ஏதும் வேலை செய்யலாமே? 

அது முடியவே முடியாது..
பாஸ் இன் கருத்தை நம்பிக்கை இல்லாத அடிப்படையில் எதிர் மறையாகப் பேசுவது பொருத்தமற்றது. முயற்சி செய்து முடிவை பொருத்தமான முறையில் எடுத்துரைக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டவை போதுவ்வன கருத்துக்களே. பொதுவாக எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாது என்பது உங்களது மற்றும் உங்களது பாஸ் இன் குண இயல்புகளையும் நடத்தை முறைகளையும் திறமையையும்  பொறுத்து வேறுபடும். அதே நேரம் நாம் வேலை செய்யும் சூழல் இதை மிகவும் பாதிக்கும். மேற்குறிப்பிட்ட விடயங்கள் சிலரது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாறுபடலாம். 

Related

தொழில் 7466724023802585998

Post a Comment

emo-but-icon

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item